மத போதகரென அறியப்படும் ஜெரொம் பெர்னாண்டோ என்ற நபரால் அண்மையில் தெரிவிக்கப்பட்ட பொறுப்பற்றதும்,

அவமரியாதையானதுமான கருத்துக்கள் வெறுக்கத்தக்கவையும், அதிருப்திக்குரியவையுமாகும்.அவரால் முன்வைக்கப்பட்ட இந்த கருத்துக்களுக்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

தூய பௌத்தத்தை உறுதியாக நம்பும் மற்றும் பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் பௌத்தராக இந்த போதகரின் கருத்து குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.

முன் எப்போதும் இல்லாத வகையில் நல்லிணக்கம்,சகோதரத்துவம்,மனித நேயம் ஆகியவை வலுவாக கட்டியெழுப்பப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருவதோடு,இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களால் மத ரீதியிலான மோதல்களும்,வெறுப்பினாலும் கோபத்தினாலும் தீய எண்ணங்கள் அனைவர் மனதிலும் ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது.

இந்நாடு நீண்ட காலமாக தூய பௌத்தத்தால் போஷிக்கப்பட்டுள்ளதோடு,பௌத்தம் என்பது ஒரு உலகளாவிய போதனையாகும்.இது எந்த மதத்திற்கோ தேசத்திற்கோ உரித்துடையதல்லாத ஒரு உலகளாவிய பொது மதமாகும்.குரோதத்திற்குப் பதிலாக பரிவையையும்,விமர்சனத்திற்குப் பதிலாக திறனாய்வையும்,அனைத்து உயிரினங்களிடமும் பெரும் கருணையையும் காட்ட உலகிற்கு போதித்த ஒரு மதமாகும்.

பௌத்த மதத்தின் சமரச இணக்கமான ஏற்பாடுகளே பிற அனைத்து மதங்களையும் மதிப்பது போலவே,அவற்றைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குவதற்கும் வழிவகுத்துள்ளது என்பது வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.குறித்து சலுகையை சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி பௌதத்திற்கு எதிராக தவறானதும் அவமரியாதையானதுமான கருத்துக்களைக் வெளியிடுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது எந்தவித குழுக்களுக்கோ எவ்வித உரிமையும் இல்லை.

முன்னர் சுட்டிக்காட்டிய பொறுப்பற்றதும், அவமரியாதையானதுமான கருத்துக்கள் எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகும் என்பதோடு, இதன் பின்னனியிலுள்ள சூழ்ச்சி யாது என்பதை வெளிப்படுத்துவதும், இவ்வாறு அவமதிக்கும் வகையிலான கருத்துக்களுக்கு எதிராக மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதும் அரச பொறிமுறை சார்ந்த பொறுப்புமாகும்.

இது தொடர்பாக எம்மைப் போலவே முழு நாடும் இதில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி