இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்திற்குள் அழைக்கப்படுவார்கள்

என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தரகர்கள் தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் சில நாட்களாக கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் நெரிசல் காரணமாக நேற்று (17) அலுவலகத்தின் ஒரு நாள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு சேவைகள் முன்கூட்டியே முன்பதிவு முறையில் இடம்பெறுகின்றன.

முந்தைய திகதியில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்து சேவைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சில தரகர்கள் முறையான முறைக்கு புறம்பாக சட்டவிரோதமான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்க முற்பட்டதால், முன்பதிவு செய்யும் பணியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கடும் நெரிசல் காரணமாக நேற்று ஒரு நாள் சேவையும் இடம்பெறாததால், சேவையை பெற வந்த பலர் பல அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர்.

சிலர் குடிவரவு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக இரவைக் கழிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி