விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உட்பட 4 பேர் 17 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.



கொலம்பிய அமேசான் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

தற்போது, அந்த அடர்ந்த காட்டிற்குள் இருந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 11 மாத குழந்தை உட்பட நான்கு பழங்குடியின குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நேற்று தெரிவித்தார்.

இதனை, “நாட்டிற்கு மகிழ்ச்சி” என்று கூறியதோடு, இராணுவத்தின் கடினமான தேடல் முயற்சிகளுக்கு பின் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெட்ரோ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மே மாதம் முதலாம் திகதியன்று விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயர் தப்பியுள்ளனர்.

இவர்களை, அமேசான் காட்டிற்குள் தேட, 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை மோப்ப நாய்களுடன் சென்றுள்ளனர்.

தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 சிறுவர்/சிறுமிகள் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி