இயற்கை என்ற ஒன்று உள்ளதுதானே. வேறு யார் வந்தாலும் எனக்குப் பிரிச்சினையில்லை, அந்த ஆபத்தான நபர் வந்துவிடக் கூடாது என்றே நான் கூறுகின்றேன்

. அவர் வந்தால் அவ்வளவுதான். எனவே சற்று சிந்தித்து 16ம் திகதி சஜித்திற்கு வாக்களியுங்கள்” என பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“புரவெசி பலய” அமைப்பின் கூட்டம் ஒன்றின் போது இந்த வேண்டுகோளை விடுத்த சுனில் பெரேரா, தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

“இந்த தேர்தலில் நாம் அமைதியாக இருக்கவே இருந்தோம். அல்லது சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு அல்லது ரொஹான் பல்லேவத்தைக்காவது ஓட்டு போடுவதற்கே நினைத்திருந்தோம். ஆனால் அதன் பின்னர் வீட்டாரும் ஏனையவர்களும் இணைந்து நாம் எடுத்த தீர்மானத்திற்கான காரணம் வேறு எதுவுமில்லை, பயமே காரணமாகும். அச்சம், அச்சம், அச்சம்  கடும் அச்சம். ஒரு வேட்பாளருக்கு கடும் பயம்.

பிரதான வேட்பாளர்கள் இருவர்தானே இருக்கின்றார்கள். ஒருவர் மீதுள்ள பயத்தினால் சுயேட்சை வேட்பாளருக்கு நாம் வாக்களித்தோம் என வைத்துக் கொள்வோமே. அப்படிச் செய்தால் நாம் பயப்பட்ட வேட்பாளருக்கு அது சாதகமாக அமைந்துவிடும். அப்போது நாம் எங்கு வாக்களித்தாலும், யாருக்கு வாக்களித்தாலும் அப்போது சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் குறைந்து போய்விடும்.

எனவே இந்த நேரத்தில் நாம் அனைவரும் சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களிக்க வேண்டும்” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி