மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையா? இல்லையா? என்ற விடயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் அவரை வரும் 16ம்

திகதி மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்பதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் நோக்கமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளதோடு, அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மற்றும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மேலும் கூறியதாவது, “எமது வேட்பாளா சஜித் பிரேமதாசா கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பில் அந்தளவு அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் நாம் கோட்டாவை மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்போம்.  மக்கள் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் மூலம் கோட்டாபயவைத் தோற்கடிக்க நாம் முயற்சிக்கப் போவதில்லை. அவ்வாறான வழியில் கோட்டாபயவைத் தோற்படிப்பது தகுதியற்றது என சஜித் பிரேமதாசா நினைக்கின்றார்.

எனினும் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்துகின்றோம். கோட்டாபய ஒரு இலங்கைப் பிரஜையல்ல. இலங்கையின் அரசியலமைப்பின் 31ம் பிரிவுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியானவர் இலங்கை பிரஜைகள் மாத்திரமேயாகும்.

கோட்டாபய அமெரிக்காவின் குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் குடியுரிமைச் சட்டத்திற்கு அமைய இலங்கையின் அவரது குடியுரிமை இல்லாமல் போய்விட்டது. அவர் இலங்கையில் அரச பதவியை வகிப்பதாயின் அவர் இலங்கையின் பிரஜையாக இருக்க வேண்டும். அவர் 2005ம் ஆண்டு அவரது சகோதரர் ஜனாதிபதி ஆனதன் பின்னர் இலங்கையின் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கு கடைபிடித்த நடைமுறைகள் மோசடியானவையாகும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி