கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டல் நிர்மாணத்தின் போது ராஜபக்ஷக்கள் பெற்ற கொமிஸ் தொடர்பில் ராஜபக்ஷ ஆட்சியில் கண்காணிப்பு பாராளுமன்ற

உறுப்பினராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும், அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரகசிய செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் கருதப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இவ்விடயங்களை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார்.

“இந்த சத்தியக் கடதாசியினை சிதம்பரம் என்ற நபரே வழங்கியுள்ளார். சிங்கப்பூர் டிஜிடல் இண்டர் என்ற நிறுவனம் ஐந்து மில்லியன் டொலர். ஐந்து மில்லியன் டொலருக்கு டிஜிட்டல் நிறுவனமும், ஹெலியாட் என்ற நிறுவனமுமே ஆலோசனைச் சேவையினை வழங்குவதற்காகக் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த எபிடெவிட்டை வழங்குவது இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பங்குதாரரும் மற்றும் உரிமையாளருமாகும். ஏராளமான விடயங்களின் தகவல்கள் இருக்கின்றன. இதில் இந்தக் கொடுக்கல் வாங்கள்களுக்காக ஐந்து மில்லியன் டொலர் வழங்கப்பட்டது என மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து மில்லியன் டொலர் என்பது எமது நாட்டுப் பணத்தில் சுமார் 100 கோடியளவானதாகும்.

இதுதான் அவர்களிடமிருந்து பெற்ற இலஞ்சம் அல்லது கொமிஸாகும். அதே போன்று தேவையான எந்த நேரத்திலும் இலங்கையின் சட்டத்திற்கு முன்னால் வந்து நீதிமன்றத்திற்கு முன்னால் வந்து இது தொடர்பில் சாட்சியமளிப்பத்தற்கோ அல்லது தேவையான எதற்குமோ நான் தயாராகவே உள்ளேன்” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி