பெரும் தேசப்பற்றாளர் எனக் காட்டிக் கொள்ளும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவின்

மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், பெற்றோர்கள் மற்றும் தங்கை ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அனைத்துச் சொத்துக்களும் வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு பொது நூல் நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பின் போது லசித பெரேராவினால் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரயன் ஷெடிக்கின் சொத்துக்களை போலி அட்டோணி அனுமதிப்பத்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்காகவே லசித பெரேரா வெளிநாட்டுப் பிரஜையான பிரயன் ஷெடிக் என்ற முதலீட்டாளரின் அட்டோணி பொறுப்பாளர் என்ற வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை கூட்டியிருந்ததார்.

தான் வெளிப்படுத்திய இந்த விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு இடத்திற்கும் தன்னோடு விவாதத்திற்கு வருமாறு லசித பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்தார்.

உதய கம்மன்பில அரசியல் நோக்கங்களுக்காக போலியான கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும், அவர் ஒரு தேசப்பற்றாளராகக் காட்டுவது கவலைக்குரிய விடயம் என்றும் லசித பெரேரா இதன் போது கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி