2010 - 2015ம் ஆண்டு காலப்பகுதியினுள் ராஜக்பக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

சஜின்வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ முகாமின் பிரதானிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.  அம்பலங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய சஜின்வாஸ் மேலும் கூறியதாவது,

“அம்பலங்கொடை பிரதேசத்தின் மீட்டியாகொடையின் அனைத்து மக்களின் முன்னிலையில் நான் கூறுகின்றேன். 2010 - 2015ம் ஆண்டு காலப்பகுதியினுள் இடம்பெற்ற மோசடிகளைப் பற்றிப் பேச நான் தயார். காரணம் நான் நிரபாதியாக வேண்டும். இப்போது எல்லா இடங்களிலும் நான் திருடன் என்றுதானே பேசப்படுகின்றது. அவ்வாறுதானே நான் பார்க்கப்படுகின்றேன். இனி நான் குற்றமற்றவன் என்பதை நிறூபிக்க இருக்கும் ஒரு வழி இதுதான்.  ரோஹித அபேகுணவர்தன அவர்களே...! வாருங்கள் நீங்கள் மொட்டுவின் சண்டியர்தானே?  நீங்கள் வந்து பலப்பிட்டிய, அம்பலங்கொடை  எல்லா இடங்களிலும் சண்டித்தனத்தைக் காட்டிவிட்டுச் செல்கின்றீர்கள்தானே? நான் உங்களது எல்லா சண்டித்தனத்திற்கும் பதில் தருகின்றேன். நவம்பர் 17ம் திகதியாகும் போது அம்பலங்கொட பலபிட்டிவை நாம் அமோக வெற்றியீட்டுவோம்.

ஐக்கிய தேசிய கட்சியினருக்கு, ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போவது எமது ஸ்ரீ.ல.சு.கட்சி சகோதரர்களேயாகும். அவர்கள் அனைவரும் இன்று எம்மோடு ஒன்றிணைந்திருக்கின்றார்கள்.

கடைசியில் சிரச மாத்திரமே இப்போது எமக்குள்ளது. சிரச தொலைக்காட்சியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். எமக்கு உதவி செய்யுங்கள். ரோஹித அபேகுணவர்தன, ஷெஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர, நாமல் ராஜபகஷ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையாவது,  எமது சஜித் பிரேமதாச கூறுவது போன்று தம்பியால் முடியாவிட்டால், அண்ணனால் முடியாவிட்டால் குடும்பத்தில் அனைவருமே வந்தாலும் பரவாயில்லை. அனைவரும் வாருங்கள். நான் தனிமையில் வருகின்றேன். நாம் பேசப் போவது 2010 - 2015ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைப் பற்றியாகும்.

ஆனால் இது 13ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ள முடியும், யார் காற்சட்டை அணிந்து கொண்டு செல்வது, யார் காற்சட்டை அணியாமல் செல்வது என்று. விவாதத்திற்கு வரும் போது நான் ஒரு பைலைக் கூட எடுத்து வரமாட்டேன். ஒரு பேப்பரைக் கூட கொண்டு வர மாட்டேன். பயப்பட வேண்டாம். ஆனால் எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறுவேன்.

பயமில்லா விட்டால் எனது சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொண்டு வந்து மக்களின் முன்னிலையில் தமது குடும்பம் சுத்தமானது என்று மக்களிடம் நிறூபியுங்கள். நான் தனியாகவே வருகின்றேன் என சவால் விடுகின்றேன்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்