இன்று ராஜபக்ஷக்கள் 2015ம் ஆண்டை விட ஆபத்தானவர்கள் என்பதால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிக்கு முதலாவது விருப்பு வாக்கினை

வழங்கிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குமாறு அரசியல் செயற்பாட்டாளரும், அரசியல் மற்றும் சமூக விமர்சகருமான விதர்ஷன கண்ணங்கர  இடதுசாரி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  “அனித்தா” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  

அந்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

நாம் கடந்த காலங்களில் இடதுசாரி மாற்று சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம். 2015ம் ஆண்டு தேர்தலிலிருந்து நாம் இதனைக் கூறினோம். 2015ம் ஆண்டில் அனைவரும் அன்னத்தை அரவணைத்துக் கொண்ட போது நாம் இடதுசாரிகளிடத்தில் ஒன்றுபட்டோம்.

எனினும் இன்று இடம்பெறுவது அன்று தோற்றுப் போன ராஜபக்ஷக்கள் அன்றையதை விடவும் மூச்சு வாங்கிக் கொண்டு களமிறங்கியிருப்பதாகும். எவ்வாறாயினும் இம்முறை நிலைமையினை நாம் பார்ப்பது 2015ம் ஆண்டில் இருந்த நிலையை விட மோசமான வகையிலாகும்.

எமக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடு இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வந்தாலும் நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும் இப்போதிருக்கும் நடைமுறைத் தெரிவு அதுவாகும். அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டே நாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். இடதுசாரி கட்சிக்கு முதல் விருப்பு வாக்கினை வழங்கிவிட்டு இரண்டாவது வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் வழங்குங்கள் என கோருகின்றோம் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி