கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் விஷம் அருந்தி வரகாபொல

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

இக்கொலை குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், தோட்டத்தை காவல் செய்து வந்த தம்பதியை காணவில்லை என்பது தெரியவந்தது.

இதகை அடுத்து சந்தேக நபர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருடன் தோட்டத்தில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி