ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (மொட்டு) குண்டு தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக ட்வீட்டர் செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி இராஜாங்க

அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பில் எதிர்ப்பைத் தெரிவித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இணை ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெருமவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபயவுக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற இரணுவ புலனாய்வுப் பிரிவு அங்கத்தவர்களின் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரத்தினுள் சில அரசியல் குழுவினால் குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி கிடைத்த ட்வீட்டர் செய்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடானது பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் இது தொடா்பான அறிக்கையினை அரச புலனாய்வுச் சேவை, பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன நவம்பர் 06ம் திகதி பொலிஸ் மா அதிபருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். இத்தகவல்களின் உண்மை, பொய் தெரியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தான் உள்ளிட்ட மூவருக்கு இந்த தகவல்கள் ட்வீட்டர் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி