ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று (24) நடைபெற உள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் இதில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்துள்ளவர்களை ஒன்றிணைத்து முன்னைய கலந்துரையாடல்கள் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஒன்றிணைவதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்