மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பல் இன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பெரும்பான்மையான மக்கள்

அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவுள்ளதாகவும், மல்வத்து தேரர் கூட இச்சட்டம் மிகவும் பயங்கரமான சட்டம் என குறிப்பிட்டுள்ளார் எனவும், அந்த அறிக்கையை தானும் ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரும் அரச மிருகத்தனம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் இந்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிப்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கமாக அமைந்துள்ளதாகவும், இந்நோக்கத்தை முறியடிக்க அனைத்து முற்போக்கு சக்திகளையும் திரட்டி வருவதாகவும், பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை போற்றும் அனைவரும் இணைந்து இதனை முறியடித்து பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் அமுல்படுத்தவுள்ள இந்த சர்வதிகார எதோச்சதிகார சட்டத்தை முற்றாக தோற்கடிக்கத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி