வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சியை முன்னேற்றுவதற்கு, பலப்படுத்துவதற்கு அதிகளவான சந்தர்ப்பங்கள் கிடைப்பது யாரிடத்தில் என்பதை

நன்கு சிந்தித்துப் பார்த்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கான நேரம் ஸ்ரீ.ல.சு.கட்சியினருக்கு வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் மஹிந்தவின் கும்பல் கடந்த காலங்களில் ஸ்ரீ.ல.சு.கட்சியை அழிப்பதற்கு முயன்ற போதிலும், ஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த ஐந்து வருட காலத்தில் அவ்வாறான அழுத்தங்கள்  மேற்கொள்ளப்படவில்லை என்றும், தற்போது ஐக்கிய தேசிய கட்சி உண்மையாகவே ஜனநாயகமடைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

UTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவித்த போது கூறியதாவது,

“இந்நேரத்தில் மிகவும் சிக்கலான தீா்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் என்னாலும் தீர்மானம் ஒன்றை எடுப்பது மிகச்சிரமமாகும். எனினும் வரும்காலங்களில் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கு நூறு வீதமல்லாத தற்காலிக தீா்மானத்தை எடுக்க வேண்டிவரும். இப்போதிருப்பது எனக்கெனில் அந்தளவு வெற்றிகரமானதல்லாத இரண்டு தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்பதேயாகும். அதில் எதில் அதிக வெற்றி உள்ளது எனப் பார்த்து அதனை எடுக்க வேண்டியுள்ளது.

இத ஒரு தற்காலிகமானது என நினைத்து வரும் காலத்தில் கட்சியை முன்னேற்றுவதற்கு, பலப்படுத்துவதற்கு அதிகளவில் எமக்கு யாரிடமிருந்து வாய்ப்புக்கள் கிடைக்கின்றது எனத் தேடிப்பார்த்து எம்மால் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  நாம் கடந்த நான்கு வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றோம்.  இந்தக் காலத்தில் எனில் ஐக்கிய தேசிய கட்சியினால் எமது கட்சிக்கு எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.

நாம் கேட்ட நிதிகளை எல்லாம் கேட்கும் நேரத்தில் வழங்கினார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கிய அளவு நிதியே எமக்கும் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியில் எமக்கு எந்த பாதிப்புக்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்தவில்லை. எனினும் எமக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது மொட்டுவின் மஹிந்த அணியேயாகும். அன்றும் பாதிப்புக்களைச் செய்தார்கள். இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி