துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.துபாயில் அல் ராஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடிக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 தொழிலாளர்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் 2 தமிழர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி