“போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஏராளமான படை வீரர்கள் சிறைகளில் உள்ளார்கள். 17ம் திகதி காலையாகும் போது அவ்வாறான அனைத்து

படைவீரர்களையும் விடுதலை செய்வேன்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது  தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கூறியது தொடர்பில் விளக்கம் கேட்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் கோட்டாபயவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய தெரிவித்துள்ள விடயத்தின் மூலம் தான் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் “சட்டத்தை அமுல் படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலும், சட்டத்தின் அரவணைப்பும் நியாயமானதாக இருக்க வேண்டும்” என்ற அரசியல் அமைப்பு உரிமை மீறப்பட்டுள்ளதாக சந்தியா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அந்தக் கூற்றானது, பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏவ்வகையான குற்றங்களைச் செய்வதற்கும், அவற்றை நியாயப்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதோடு, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறமையான, நேர்மையான அதிகாரிகளின் துணிச்சலை வெலவீனப்படுத்தும் செய்வதாக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி