அந்தாண மடலகம காலனியில் தடியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (17) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 1 6ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், இறந்தவருக்கும், சந்தேக நபரின் மனைவிக்கும் இடையே, திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு, கொலைக்குக் காரணம் என, விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்தாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி