ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி

மைத்திரிபால சிரிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் பிற்போடுவதற்கு நேற்று (5) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டாரங்களில் நேற்று (5) இடம்பெற்ற “நாம் ஸ்ரீலங்கா” மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பதில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாசாவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கட்சி ஆலோசகா் பதவியிலிருந்து நீக்குதல் மற்றும் அவரது கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவது தொடர்பில் பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில் மத்திய செயற்குழுவில் இது தொடர்பாக பேசப்பட்ட போதிலும் எந்தவித தீர்மானங்களும் இவ்விடயமாக மேற்கொள்ளப்படவில்லை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி