எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட

பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (15ஆம் திகதி) மாலை 4.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 6 குழந்தைகள், 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்