கோட்டாபக ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களின் வரலாறு மற்றும் அவர்கள் முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடணம் என்பவற்றை

ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தமது கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானத்தைவெளியிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இது தொடா்பில் பீபீசி சிங்கள சேவைக்கு அக்கடசியின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் கருத்து தெரிவித்த போது, சஜித் பிரேமதாசாவுக்கு தாம் ஆதரவளிப்பதற்காக எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“நாம் இந்த இரண்டு வேட்பாளர்களின் வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தோம். ஜனநாயகத்திற்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்?, சட்டத்தின் ஆட்சிக்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தோம். எனினும் எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் ப்ளொட் அமைப்பு ஆகியன இணைந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் செயற்படுகின்றார்.

இதே வேளை ப்ளொட் அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் பீபீசி சிங்கள சேவைக்குத் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி