இலங்கையின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள, இலங்கையின் தேசிய கொடியை மதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர். சம்பந்தன் போன்றோர்

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் போது  கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்குவது 1990ம் ஆண்டில் திருகோணமலை நகரில் தனியான ஈழ நாட்டைப் பிரகடணப் படுத்தி, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவும், ஒரே தடவையும் ஈழக் கொடியை பகிரங்கமாகவே ஏற்றிய வரதராஜா பெருமாள் போன்றோரே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தரை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய, இலங்கை தேசிய கொடியை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய ஒரு அரசியல்வாதி என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது,

“இது ஒன்றும் புதிய விடயமல்ல. தமழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் எம்மோடு இணைந்தே பணியாற்றுகின்றது. எம்மோடு பாரியளவிலானோர் தற்போது இணைந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது தெரண டீவியும்  நிவ்ஸ் அலார்ட் ஒன்றை போட்டுள்ளதை நான் கண்டேன்.  இது நாம் நினைத்த விடயங்களேயாகும். அவர்கள் இப்போது டீஎன்ஏ கட்சியும் சஜித் பிரேமதாசாவுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளதாக கூறுகின்றனர்.  இனி அவர் இதோ புலிகளும் சஜித்துடன் சேர்ந்துவிட்டார்கள் எனக் கூறுவார்கள்” என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி