ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குகொண்ட பிரசார கூட்டம் இன்றையதினம் (4) முல்லைத்தீவு முள்ளியவளை

பிரதேசற்ற்ஹ்தில் இடம்பெற்றது . இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் கேப்ப்பாபுலவு மக்களின் காணிபிரச்சினைக்கும் தன்னால் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து அங்கு  உரையாற்றிய அவர் ,முல்லைத்தீவின் ஆறு பிரதேச செயலகங்களிலும் 660 சிறு கிராமங்களை உள்ளடக்கியதாக ஒவ்வொரு குடும்பங்களது ஒவ்வொரு உறுப்பினர்களின் எதிர்கால பொறுப்பையும் சஜித் பிரேமதாச கைக்கு எடுத்துள்ளார் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இப்பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் கைத்தொழிலை சிறந்த முறையில் கொண்டு செல்லும் சிறந்த ஏற்பாட்டை உருவாக்கித் தருவேன். நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புப் பகுதிகளை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வேன். இப்பிரதேசத்தில் இருக்கும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவேன். நீர் விநியோக திட்டங்களை விரிவுபடுத்தி தேவையான நீரைப் பெற்றுத் தருவேன்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான, அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையையும் எடுப்போம். பெண்களை மையப்படுத்திய குடும்பங்களுக்கு தேவையான பொருளாதார வசதிகளை கொடுப்போம்.

2010ம் ஆண்டு யுத்தம் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தச் சலுகைகளும் இப்பிரதேசங்களில் வழங்கப்படவில்லை. எமது அரசில் வடக்கு, கிழக்கு வெவ்வேறாக இரு ஜனாதிபதி மையங்களை உருவாக்கி மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நடவடிக்கையை எடுப்பேன்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி