பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நீராடச் சென்று காணாமல் போன இரு

மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (12) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

17 வயதுடைய மாணவனும் மற்றும் 15 வயதுடைய மாணவனும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் பலாங்கொடை தேசிய பாடசாலை மற்றும் பலாங்கொடை CC தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று நீராட சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி