நிதி மோசடிப் பிரிவின் (FCID) முன்னாள் பணிப்பாளர் ரவி வித்தியாலங்காரவின் மனைவி பெசிலிகா வித்யாலங்கார மற்றும் மகன் அசேல ஜயம்பதி ராஜசுந்தர வித்யாலங்கார

ஆகியோரை நிதி மோசடிப் பிரிவுக்கு அழைப்பதை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என்றும். தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து இதுவரையில் அப்படியான கோரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

ரவி வித்யாலங்காரவின் மகனால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு உடனடியாக செயற்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு நிதி மோசடிப் பிரிவின் செயற்பாடுகளுக்கு அழுத்தங்களைச் செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் theleader.lk ,ணையத்தளம் கேட்ட போதே அவ்வதிகாரி இதனைத் தெரிவித்தார்.

PHOTO 2019 11 02 14 10 44

நிதி மோசடிப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான ரவி வித்யாலங்காரவின் மகன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, தனக்கும் தனது தாய்க்கும் இம்மாதம் 04 மற்றும் 05ம் திகதிகளில் நிதி மோசடிப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், தானும், தனது தாயும் இத்தினங்களில் நிதி மோசடிப் பிரிவுக்குச் சென்று வாக்கு மூலம் வழங்குவது தொடர்பில் ஊடகங்களில் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பெரும் சாதகமான நிலை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0a12a68bcbf4fc8bad8bd33b06ec38ae L


அவ்வாறு முறைப்பாடு செய்துள்ள அசேல வித்யாலங்கார, தனக்கும், தாய்க்கும் நிதி மோசடிப் பிரிவில் ஆஜராவதை ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை!


பொலிஸ் நிதி மோசடிப் பிரவின் முன்னாள் பணிப்பாளர் ரவி வித்யாலங்காரவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை நிதி மோசடிப் பிரிவுக்கு அழைத்து வாக்கு மூலம் பெறுவதை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதா? என அறிந்து கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நாம் எடுத்த முயற்சிகள் பயனிக்கவில்லை.  எவ்வாறாயினும் எமது கேள்விக்கு பதில் வழங்கிய மேலே குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் கூறும் போது, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அழுத்தங்களைச் செய்து  தண்டனைச் சட்டத்தை இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் இல்லை எனத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி