இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி இன்று (09) மாலை கட்டுநாயக்க விமான

நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர்களான துஷான் ஹேமந்த மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் டெஸ்ட் குழாமில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி இலங்கை வந்துள்ளதுடன் முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அயர்லாந்து டெஸ்ட் தொடரில், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அதற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி