Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலும் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் - எத்தனை நாட்களை சமாளிக்கும் இலங்கை?

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2022 • 3:03 PM

இந்தியாவிடமிருந்து மேலும் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் - எத்தனை நாட்களை சமாளிக்கும் இலங்கை?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இதனிடையே மின் உற்பத்திக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
  • நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
எழுத்து அளவு:


இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

வீதி ஓரங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன் டீசலினை பெறுவதற்காக கேன்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடல் தொழில் உள்ளிட்ட ஏனைய கைத்தொழில்களும் பாதிக்கப்படுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ள மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே மின் உற்பத்திக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
இவ்வாறு நாட்டில் தற்போதைய எரிபொருள் தேவையானது பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் நாட்டிற்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருள் அளவு போதுமானதாக இருக்குமா அல்லது இன்னும் எத்தனை தினங்களுக்கு இது போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது.

எவ்வாறாயினும் இதற்கான நிரந்தர தீர்வு இப்போதைக்கு அரசாங்கத்திடம் இல்லை.

இதனிடையே, நாடு உணவுத்தட்டுபாட்டை எதிர்கொள்ளும் என சபநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற, தேவையானது அரசியல் மாற்றம் மட்டுமா என்ற கேள்வியும் உள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...