இலங்கையில் ரேடார் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனை ஒன்றை சீனா சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இது தொடர்பான ரேடார் அமைப்பை இலங்கையின் தேவேந்திர முனையில் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக எகனொமிக் டைம்ஸ் செய்தித்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நடத்தை மற்றும் இந்திய கடற்படையின் செயல்பாடுகளை கண்காணிப்பதே ரேடார் அமைப்பை அமைப்பதன் நோக்கம் என்று இது தொடர்பான அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திரமுனைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தொடர்புடைய ரேடார் அமைப்பு சீன அறிவியல் எகடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவனத்தால் இயக்கப்பட உள்ளது.

குறித்த ரேடார் அமைப்பு ஏற்படுத்தப்பட்டால், தியாகோ காசியா தீவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும் முடியும் என எகனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு அமைப்பின் ஊடாக கிழக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை செயல்பட முடியும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி