சகல அரச பாடசாலைகளையும் சர்வதேச தரம் வாய்ந்த பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதே ஐக்கிய மக்கள் சக்தியின்

நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டுமானால்,அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு கல்வி முறை சரியாக அமுலாக்கப்பட வேண்டும் எனவும், நாட்டின் கல்வித்துறையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தாமல் அனைவரும் ஆங்கில மொழிக் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 26 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை ரன்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (06) நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 26 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹம்பாந்தோட்டை ரன்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் இருபத்தி ஐந்து கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 20,653,650.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

உலகில் ஏனைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வரையில் நாம் உள்ளக ரீதீயாக மாவீரர்களாகவே எண்ணிக்கொண்டாலும், நாடு உலகிற்கு திறந்து விடப்பட்டு சர்வதேச போட்டித் தன்மைக்குள் பிரவேசிப்போமேயானால் நாம் மிகவும் கீழ்நிலையில் தான் இருப்போம் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் பாடசாலைகளால் மின்கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் தலைநகரின் கண்ணாடி அறைகளுக்குள்ளேயே இருந்து கொண்டு நாட்டின் தலைவர்கள் டிஜிட்டல் புரட்சி குறித்து பேசும்போது கிராமப்புற பாடசாலைகளில் IT ஆசிரியர்கள் இல்லை என்றும், சில ஆசிரியர்கள் 2 பாடசாலைகளில் IT கற்பிக்கும் நிலை காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரன்மினிதென்ன வித்தியாலயத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் போது மின்சார சபையினர் மின்சாரத்தை துண்டிக்க வந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் குறித்த பாடசாலையின் நிலுவை மின்கட்டணமும் செலுத்தப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி