ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் கொள்கை பிரகடணம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது அந்த தேர்தல்

கொள்கை பிரகடணத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு ஆதரவு வழங்குவதா என தமிழ் கட்சிகள் கலந்துரையாடி முடிவுக்கு வருவதாக  டெலோ அமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நவம்பர் 01ம் திகதியிலிருந்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  ஐந்து தமிழ் கட்சிகள் கடந்த 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தீர்வு எட்டப்படாததால் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு தபால் மூலம் வாக்களிக்குமாறு அறிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களிடையே முரண்பாடான கருத்துக்கள் இருந்ததாகவும் ஒரு வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவதற்கான இறதி தீர்மானத்திற்கு வரமுடியாது போனதாகவும் எனவே இந்தப் பேச்சுவார்த்தையை பிற்போட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி