Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முப்படை, பொலிஸிலிருந்து வெளியேறிய 750 பேர் குற்றச் செயல்களில்!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2024 • 7:35 AM

முப்படை, பொலிஸிலிருந்து வெளியேறிய 750 பேர் குற்றச் செயல்களில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விட்டு வெளியேறிய சுமார் 750 பேர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
  • அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
  • சில காலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாகவும் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களே அதிகளவான குற்றவாளிகள் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

விட்டு வெளியேறிய சுமார் 750 பேர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சில காலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாகவும் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களே அதிகளவான குற்றவாளிகள் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுக்திய  நடவடிக்கையில், சிரேஷ்ட அதிகாரிகளும்  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யுக்திய நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்தோம்.
 
அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
 
சட்ட அமுலாக்கம், போதைப்பொருள் சோதனைகள் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவை பொலிஸ் நிலையங்களால் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுகின்றன. 
 
மற்றைய கடமைகளில் பணியாற்றிய அதிகாரிகளும் இந்த நோக்கத்துக்காக பணிக்கமர்த்தப்படுவார்கள். எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளை அதிக திறனுடன் அவர்கள் மேற்கொள்வார்கள்.
 
பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. இதனாலேயே தற்போது, ​​வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...