ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களிடையே தான் நியமிக்கத் தீர்மானித்திருப்பது ஒரே ஒரு பதவி மாத்திரமே என

சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்திருப்பது மாத்திரமே தான் இதுவரை தீர்மானித்துள்ள ஒரேயொரு பதவி என இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இதனைத் தெரிவித்திருப்பது அவர் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னரும் பிரதமராகப் பதவி வகிப்பது தானே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு அலரி மாளிகையில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியதைத் தொடர்ந்தேயாகும்.

தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதா? இல்லையா என்ற விடயத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதுவரை சரியான பதிலை வழங்கவில்லை என்பதோடு, இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இத்தேர்தல் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தவிற பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல எனத் தெரிவித்து வந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி