கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் மேலும் ஆதரவளிப்பார்கள் என அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை எனவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆர்டர்களை பெற்று குறைந்தபட்ச இருப்புக்களை பேணுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி