கொழும்பு பித்தளை சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின்  ஆடையில் இரத்தம் வடிந்திருப்பதை படங்களில் காணக் கிடைத்தாலும்,

அந்த இரத்தம் அவருடையதாயின் அதற்குரிய காயத்தைக் காட்டுமாறு ஓய்வு பெற்ற இராணுவ படைவீரர் ஒருவர் கோட்டாபயவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடும் போது,

“பொதுஜன பெரமுணவுக்கோ, மொட்டு கட்சியில் இருக்கும் எவருக்குமோ, ராஜபக்ஷக்களுக்கோ நாம் பயப்படப் போவதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள படை வீரர்களை விடுதலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். அவரது கொள்கைப் பிரகடணத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை.

நான் படையினரின் போராட்டம் மற்றும் அரசியல் இரண்டையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நான் இராணுவ பேராட்டத்தினால் பிரபலமடையவில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியில் அன்று நாம் ஒன்றிணைந்து பணியாற்றியிருந்தாலும், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தாலும் மற்றவர்களைப் போன்று நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் 2009ம் ஆண்டில் படைவீரர்கள் மாகாண சபைக்கு வந்த போது மாகாண சபை மேடையில் நான் பிரதான பேச்சாளர். மாகாண சபை அல்லது இப்போது நான் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன். நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அதே போன்றுதான் எம்மால் இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் இருந்தது. 2000ம் ஆண்டில் ஆணையிறவில் நாம் ஆயிரக்கணக்கான படையினர் தனிமைப்பட்டுப் போயிருந்தோம். அப்போது கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை. ஜெனரல் ஜானக பெரேரா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதான் எம்மை மீட்டெடுத்தார்கள். இரண்டு கப்பல்கள் வந்துள்ளது, காங்கேசன்துறைக்குச் செல்ல ஆயத்தமாகுமாறு சொன்னார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினை மீட்டெடுத்த போது கோட்டாபய இருக்கவில்லை.

இப்போது நான் எனது ஆடையைக் கழட்டிக் காட்டுகிறேன். எனது நெஞ்சில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளது. முடிந்தால் கோட்டாபயவின் உடம்பில் ஒரு காயத்தைக் காட்டுமாறு அவருக்கு சவால் விடுகின்றேன் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி