குடும்ப ஆட்சிக்காரர்களிடம் நாட்டைக் கையளிப்பதா அல்லது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவோரிடம் நாட்டைக் கையளிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த  தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன், ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறும் வலியுறுத்தினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்யும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு இன்று புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபுறம் பாஸிசவாதமும், மறுபுறம் ஜனநாயகமும் போட்டியிடுகின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.  அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. 

மக்களை முன்நிறுத்திய ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதற்கான ஒரே தெரிவு சஜித் பிரேமதாசவே ஆவார்.  கோத்தபாய ராஜபக்ஷவின் மேடையில் அவருடைய குடும்பம் மாத்திரமே நிற்கின்றது. எனினும் எம்முடன் அனைத்து இனமதங்களைச் சார்ந்தோரும்,  நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களைச் சார்ந்தோரும் கைகோர்த்திருக்கின்றனர் என்றும் அவர் இதன்போது கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி