நான் இரண்டில் ஒன்றை நல்ல முறையிலோ அல்லது கூடாத முறையிலோ தீர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் அதற்காக இந்நாட்டு மக்கள் தயார்” என

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  நாவல வீதி, ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்மராஜித விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமேந்திரன் உள்ளிட்ட குழுக்களுக்கு  இனிமேலும் அடிபணிய முடியாது என்றும், அவர்கள் விதைக்கும் தீவிரவாதத்தை நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ துரிதமாக ஒழிக்க வேண்டும் என்றும், தற்போது அரசாங்கத்தினுள் மற்றொரு அரசும், சட்டத்தின் உள்ளே மற்றொரு சட்டமும் உள்ளது என்றும், இந்நிலையினை மாற்றுவதற்கு நாட்டு மக்கள் அடுத்த மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அவர் இதன் போது கூறினார்.

கடந்த தேர்தல்களின் போது ராஜபக்ஷக்களுக்கு பகிரங்கமாகவே ஆதரவைத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பு, இம்முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் மௌனமாக இருந்து வந்ததோடு, நேற்றிலிருந்து மீண்டும் களத்திற்கு வந்திருப்பது மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பின்னடைவுக்கு உள்ளாகியிருப்பதன் காரணமாகவே என அவ்வமைப்பின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி