வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL)

அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக VIASL சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்தார்.

வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அதற்கு சாதகமான பதில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும்,பாவித்த வாகனங்களுக்கான சந்தை கடன் வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்ததாக சாந்த கமகே வெளிப்படுத்தினார்.

இவ்வாறான நடவடிக்கையானது உள்ளுர் வாகன சந்தையை வலுப்படுத்தும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி