கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு இன்றைய தினம்(16.03.2023) சற்று அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரச்சுட்டெண்
கொழும்பில் தீவிரமடையும் ஆபத்தான காற்றின் நிலை!இலங்கையில் மீண்டும் மாற்றம்

கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 ஆகவும், கம்பஹா மாவட்டத்தில் 130 ஆகவும், பத்தரமுல்லையில் 121 ஆகவும் காற்று தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி