பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு

செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் 2 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வௌிநாடுகளுக்கு பயணிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி