தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா

கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர்.

தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குருந்தூர் மலையில் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் விகாரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் திடீர் விஜயம் செய்து களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும் தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்து மீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டுள்ளது.

அங்கு சீருடையில் நின்ற இராணுவத்தினர் பலர் காட்டுக்குள் தம்மை மறைத்துக்கொண்டுள்ளனர்.

கட்டுமானத்திற்கான வாளி போன்ற தடையங்கள் மேற்பகுதியில் காணப்பட்டுள்ளது.

குருந்தூர் குளத்திற்குள் இராணுவத்தை தவிர வேறுயாரும் மீன்பிடிக்கவோ குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில், பெருவாரியான மீன்களைப்பிடித்து கருவாடாக்கி தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – இணையம்

தொடர்புடைய செய்தி...

 

kuru1.jpgkuru2.jpgkuru3.jpg

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி