13ஆம் திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று இது ஒரு பிரிக்கப்படாத நாடு. அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட

வேண்டும் என்றார். ஒரு நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பில் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து கட்டியெழுப்புவது தொடர்பாகவே கலந்துரையாடினோம்.

தனது தந்தை முன்னர் முன்வைத்த பழைய முறையான கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நகரத்தைக் கட்டியெழுப்பலாம். அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற திட்டக் கருத்தை முன்வைத்தார்.

இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்பதை கடந்து இலங்கையின் பிள்ளைகளென செயற்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் உரைத்தார்.

மத ரீதியில் பிரிப்பதை தான் எதிர்ப்பதாலும் அனைத்து மதங்களுக்கும் உதவி செய்திருக்கின்றோம் தொடர்ந்தும் செய்வோம் எனவும் கூறினார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று இது ஒரு பிரிக்கப்படாத நாடு. அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார். ஒரு நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என கூறினார்.

எமது மக்கள் உட்பட தெற்கிலும் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையை நான் எதிர்க்கட்சித் தலைவருக்கு எடுத்துக் கூறினேன்.

இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து போன்ற கட்டமைப்பை உருவாக்கி மக்களிடம் அதிகாரம் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்காகவே மக்கள் சக்தி என்ற கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டதாக கூறினார்.

படித்தவர்கள் உட்பட பலர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையானது நாட்டின் மிக இறுக்கமான இக்கட்டான நிலையாகும். அது நாட்டிற்கு மிக அபாயகரமானது. அதை ஈடுசெய்ய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம். என்றும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி