உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான மேலதிகத் தீர்மானங்கள், எதிர்வரும் 23ஆம் திகதிக்குப் பின்னர் எடுக்கப்படும்

என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை குறிப்பிடவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.  

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு முன்னதாக அறிவித்திருந்தது.

தபால் வாக்குச்சீட்டுகள் அரச அச்சகத்தில் இருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால், தபால் மூல வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை நாட்களில் ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும்.

எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி