"இறுதிப்போரில் பிரபாகரனுடன் அவரின் மனைவி, மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து விட்டனர். பிரபாகரன் குடும்பத்தில்

எவரும் இன்று உயிருடன் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

"விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்பட்டுவிட்டார். இந்தத் தகவலை 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டது.

இந்நிலையில் பிரபாகரனும் அவரின் மனைவியும் மகளும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று பொய்யான தகவலை தமிழகத்தில் உள்ள புலிகள் சார்பு அமைப்பைச் சார்ந்த முக்கியஸ்தர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பொய்யான தகவலை வெளியிட்டவருக்கு எதிராக இந்திய மத்திய அரசு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பொய்யான தகவல் தொடர்பில் இலங்கையில் எவரும் குழம்பத் தேவையில்லை" - என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி