திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம்

நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்த பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதோடு அதன் முடிவுகள் பெரிய அலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

இதன்மூலம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் மிகுந்த தயக்கத்துடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் என்றார்.

மக்கள் ஆணையின்றி நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் நிலையான தீர்வுகளைக் காண முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வித மக்கள் ஆணையும் இல்லாமல் ஆட்சியில் நீடிக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி