வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எந்த விவாதங்களும் அவசியமில்லை என மக்கள் விடுதலை

முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சபையில் குறிப்பிட்டார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்களோ அல்லது இராணுவத்தினரோ கையகப்படுத்தியிருந்த அதனை உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் இதனை எதற்காக விவாத பொருளாக மாற்றி ரணில் விக்கிரமசிங்க அதனை தனது கொள்கை பிரகடன உரையில் குறிப்பிடுவதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டுகின்றார் என்றும் எதற்கு சர்வகட்சி அரசாங்கம் என்றும் அதில் தாம் கலந்து கொள்ளவில்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள் அப்போது ஒரு தீர்க்கமான முடிவினை எட்டமுடியும் என்றும் மாறாக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டி கலந்துரையாடுவதால் எந்த பயனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து ரணில் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றார் ஆனால் பிரதமர் வேறு ஒன்றை சொல்லி மக்களை குழப்புகின்றனர் என தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி