தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட

உண்மைகள் தொடர்பில் முரண்பாடான சூழல் நிலவுவதாக வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே ஜனாதிபதியின் சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக ஷாப்டர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

உணவுடன் சயனைட் உட்செலுத்தப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்தவரின் சடலத்தின் குணாதிசயங்களை ஆராயும் போது அது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவது சிக்கலாக உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முரண்பாடான அறிக்கைகளின் அடிப்படையில் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் முடிவெடுப்பது கடினம் எனவும், இது தொடர்பில் மேலும் பரிசீலிக்குமாறும் நீதிமன்றில் ஜனாதிபதியின் சட்டத்தரணி கோரினார்.

குறித்த வைத்தியரை 08 மாதங்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதிப்பதற்கு இலங்கை மருத்துவ சபை கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி தீர்மானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இறுதி விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் உத்தரவை அறிவிப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சயனைட் செலுத்தப்பட்டே தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்டார்

பிரபல வர்த்தகர் தினேஸ்சாப்டர் சயனைட் செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது.

சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திரஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்;ப்பித்துள்ளனர். கழுத்துநெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியவை இல்லை என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என சிஐடியினர் தெரிவித்துள்ளனர். தினேஸ்சாப்டர் தனது மனைவிக்கும் மனைவியின் குடும்பத்தினருக்கும் எழுதிய பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி