அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு திறைசேரி செயலாளருக்கு ஜனாதிபதி

ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு இது குறித்து அறிவித்தார்.

இதற்கமைய சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவி, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி உதவி என்பவற்றுக்கு மாத்திரமே நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், தரம் 05 புலமைப்பரிசில் கொடுப்பனவு, மஹபொல உதவித்தொகை, திரிபோஷ வேலைத்திட்டம், உழவர் ஓய்வூதியம், பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்குத் திட்டம், இராணுவம் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினருக்கான கொடுப்பனவு, இராணுவ வீரர்களின் பெற்றோர் பராமரிப்புக் கொடுப்பனவு, ஒத்திவைக்க முடியாத மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய தொலைத்தொடர்பு சேவைகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், இராணுவத்தினருக்கு உணவு வழங்கல், பராமரிப்பு சேவைகள், கட்டிட வாடகை, துப்புரவு சேவைகள், பாதுகாப்பு சேவைகளுக்கான ஒப்பந்தக் கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதி போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் மற்றும் உர மானியம் வழங்கல், போன்ற நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி