முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பல ஏற்பாடுகள்

செய்யப்பட்டதாக 'தெரண' தனியார் ஊடக வலையமைப்பின் தலைவர் திலீத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பயன்படுத்திய 'கோட்டா கோ ஹோம்' 'gota go home' என்ற கோஷத்தை முதலில் சமூகமயமாக்கியவர் ராஜபக்ஷ குடும்பத்தினர். மகிந்தவின் மகன் யோஷித ராஜபக்ஷவே சமூகவலைத்தளமொன்றில் முதலில் பகிர்ந்தார்.

ஆனால் அதனை அவர் உருவாக்கினாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை அதிபராக ஆதரித்ததால் தான் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதாவது எனது நெருங்கிய நண்பரான கோட்டாபய ராஜபக்ஷவை ராஜபக்ஷ குடும்பத்திற்குள் இருந்து கோட்டாபயவாக பிரித்து வேறு மார்க்கத்தில் கொண்டு செல்லவுள்ளதாக எண்ணி எனக்கு கடும் எதிர்பினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் நாட்டை நிர்வகிக்கும் ஜனாதிபதி என்ற வகையில் ராஜபக்ஷ குடும்பத்தின் முழு எதிர்ப்பினையும் மீறி கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவியதாகவும், பின்னர் கோட்டாபயவின் முகமும், ஜனாதிபதி கோட்டாபயவின் முகமும் வேறுபட்டமையினால் நேரடியாக அவரிடமிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி