இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஈழத் தமிழர்களுக்கும் அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக மாறி

உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை வட்டாரத்துக்குரிய வட்டாரக் கிளையின் புதிய நிர்வாக தெரிவுபுளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமெரிக்காவிற்கு உலகத்தில் சீனா குறிப்பாக இலங்கையில் அகலக்கால் பதிப்பது பிரச்சினையாகும். அதே போல் இலங்கையின் வடக்கு கிழக்கு முனைகளில் சீனாவின் கால் பதிப்பானது இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு பிரச்சனை. இலங்கையை இப்போது சீனாவின் ஆதிக்கத்திற்கு கருவியாகவுள்ளது

கடந்த 2009ம் ஆண்டுமுதல் 2022ம் ஆண்டு செப்ரம்பர் வரையும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள ஆதரவாகவும் சீனா இதுவரை காலமும் வாக்களித்தது வந்துள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல அயல் நாடாகிய இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இப்போது எமக்கு மிக நெருக்கடியான ஒரு காலம் ஒரு புறத்தில் போதை வஸ்து தொடர்பான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் மறுபுறத்தில் நாடுகளின் பிடிகளுக்கு முகம் கொடுக்கின்றோம் நாங்கள் எங்களுக்குள் இருப்பவர்களை ஒன்றிணைத்து வைத்திருப்பதில் நெருக்கடிகளை சந்தித்து இருக்கின்றோம்.

இவையெல்லாம் எங்கள் முன்னால் சவால்களாக நிற்கின்றன இவை எல்லாவற்றுக்கும் மேலாக எமக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தேவை எனில் அமெரிக்காவினுடைய பங்கும் இந்தியாவினுடைய பங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் தலையீடும் தேவை.என்றும் தெரிவித்த அவர்,

இப்போது விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதனால் எமது மக்கள் மீளவும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள் இவ்வாறான நிலையில் உதவி தேட வேண்டிய ஒரு நெருக்கடி தோற்றுவிக்கப்படும் இதனை சீனா சரியாக பயன்படுத்துகின்றது இந்த சூழ்நிலைகளிலிருந்து விடுபட வேண்டுமாயின் நாங்கள் ஒரு பலமான சக்தியாக இருந்து தான் ஆக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பூநகரி பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி