அதிகாரப் பகிர்விற்காக தமது கட்சி தனது கூடிய அர்ப்பணிப்புடன் செயற்படும் என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ “த ஹிந்து” பத்திரிகைக்கு
வழங்கிய கருத்து தொடர்பில் விமல் வீரவங்சவின் தேசிய சுநத்திர முன்னணி குழப்படைந்துள்ளது.

அக்கட்சியினால் இயக்கப்படும் lanka Lead News  இது தொடர்பில் குணதாச அமரசேகரவின் கருத்தை வெளியிட்டு “மொட்டு” கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்தொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

“பெசில் ராஜபக்ஷ ஹிந்து பத்திரிகைக்கு கூறிய விடயம் தொடர்பில் நாம் கூறத் தேவையில்லை. அது தொடர்பில் சுமேந்திரனுக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நல்ல பதிலை வழங்கியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ கூறும் விடயங்களோடு இணங்குகின்றோம். பெசில் ராஜபக்ஸ கூறிய விடயங்கள் உண்மையிலேயே அவர் கூறினாரா என்பது எமக்குத் தெரியாது. அது தொடர்பில் புதிதாக எதையும் கூறுவதற்கு இல்லை. காலாகாலமாக நாம் கூறி வந்த விடயத்தையே இங்கு கூறுகின்றோம்” என அந்த இணையத்தளத்தில் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி