உலகமே நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம், சவுதி அரேபியா இரகசியமாக மரண தண்டனையை

நிறைவேற்றிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு குற்றச்சாட்டை வீசியிருப்பது இங்கிலாந்து அமைச்சர்கள் என்பதால், உலக கவனம் சவுதி அரேபியா பக்கம் குவிந்து வருகிறது.

மரண தண்டனை என்ற வார்த்தையை உச்சரித்தாலே, நம் அனைவரது கவனமும் சவூதி அரேபியா பக்கம் செல்வதை தவிர்க்க முடியவில்லை.

அரசு ஊடக அறிக்கை

குற்றவாளிகளுக்கு தண்டனை என்றாலே அது மரணதண்டனை என்றே அந்நாட்டில் பதிந்து விட்டது. கொலைக் குற்றவாளிகள், போதைமருந்து கடத்தல் தொடர்பில் தண்டிக்கப்பட்டவர்கள், பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு இத்தகைய தண்டனைகள் கிடைக்கின்றன.

எனவே, மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்களின் எண்ணிக்கை, சவூதி அரேபியாவில் சமீப காலங்களாகவே அதிகரித்து வருகிறது. ஆனால், பெரும்பாலும், மரணதண்டனை நிறைவேற்றப்படும் வரை, அந்த விவரங்களை அரசு வெளியிடுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இவர்களின் மரண தண்டனை நிறைவேறிய பிறகுதான், சம்பந்தப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கு அரசு ஊடக அறிக்கைகள் மூலம் தெரியவருவதாக கூறப்படுகிறது.

144 குற்றவாளிகள்

கடந்த வருடம் மொத்தம் 69 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 144 குற்றவாளிகளுக்கு சவூதி நிர்வாகம் மரணதண்டனை நிறைவேற்றி உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

அதிலும், கடந்த மார்ச் மாதம் மட்டும், பயங்கரவாதம் தொடர்புடைய நபர்கள் என்று சொல்லி, 81 பேர்களுக்கு ஒரே நாளில் மரணதண்டனை நிறைவேற்றியது சர்வதேச நாடுகளின் கவனத்தை அதிர்ச்சியுடன் ஈர்த்திருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனை உலக செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர பின்னடைவு

உலகம் முழுவதும் நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்து வந்தன. அந்த சமயத்தில், பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது என்று இங்கிலாந்து அமைச்சர் குழு வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிலாரி பென், டேவிட் டேவிஸ், ஆண்டி ஸ்லாட்டர், சர் பீட்டர் பாட்டம்லி, அலிஸ்டர் கார்மைக்கேல் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "தங்களுடைய தவறுகளை மறைக்க சவூதி அரேபிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். உலக மக்களின் கவனம் வேறு திசையில் இருக்கும் போது, இதனை நிறைவேற்ற திட்டமிட்டும் உள்ளனர். இதனால் சவூதி அதிகாரிகள் குறைந்த இராஜதந்திர பின்னடைவை சந்திக்க நேரிடும்.

20 பேருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியா விடுமுறை காலத்தில், வெகுஜன மரணதண்டனைகளை நிறைவேற்றக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். பண்டிகை மற்றும் புத்தாண்டு காலங்களில் சர்வதேச சமூகம் விரைவாக பதிலளிப்பது கடினமாக இருக்கும்போது, மரண தண்டனையை சவுதி நிறைவேற்றி இருக்கிறது" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டியை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சவூதி அரேபியா 20 பேருக்கு மரண தண்டனை விதித்து விட்டதாகவும் அதில் 12 பேர் வெளிநாட்டவர் என்றும் புது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. மேலும், உலகமே கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடி வரும்போது, சவூதி அரேபியா நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றொரு தகவலை கூறியுள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி